ஏதுமின்றி நிற்பேன்

இந்த உலகம் சுற்றும் வரை காதலில்
நான் உன்னை சுற்றுவேன்★
புயலடித்தாலும் மழையடித்தாலும்
எனை ஏதும் செய்யாது!
நீ என்னுள் உய்க்கும்போதிலே★
சுனாமியும் எனை சுகமாய் தழுவிச் செல்லும்,
சுட்டெரிக்கும் சூரியன் என் நடுத் தலையில் நடுக்கும் பனியாய் இறங்கியது, ஓருடையும் தேவையில்லை காஷ்மீரில் எனக்கு,
நூறுடையும் போதவில்லை சென்னையில் எனக்கு,
நீ இருந்தால் என் உயிரும் தேவையில்லை எனக்கு★

எழுதியவர் : பாலமுருகன் பாபு (5-Apr-18, 3:12 pm)
சேர்த்தது : BABUSHOBHA
Tanglish : edhuminri nirpen
பார்வை : 114

மேலே