விழி அசைவில்
உன் கருவிழிகள் சுழலும் அழகில்
என் மனமொரு மொழி பேசியதே!
உன் விழி காட்டும் வழியன்றி மறுவழி தேடாதென் மனம்,
ஒரு வழியும் தென்படவில்லை
ஆர்ப்பரிக்கும் மனதடக்க,
அருள் விழி பொங்கும் ஆன்றோர் பாதம் நாடினேன் அகமடங்க,
உன் தெரு வழி நடக்கையில் மட்டும் என் பாதம் தரைபடவில்லை,
மற்றெவ்வழி நடந்தாலும் அடிப்பாதம்
அகப்படும் மலரும் முள்ளானதே!
ஆலை அகப்பட்ட கரும்பாய் மனம்
உன் குறும்பு பார்வையில் நசுங்கியதே!
நசுங்கிப் போனாலும் கிடைத்தது
இனிப்பான சாறுதானே!
ஆதலால் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!🌷