மோகம்

மோகம் மதிமயக்கம்
மதிமயங்க துன்பங்கள்
வந்து சேரும்
மாமுனி விஸ்வமித்ரான்
சீரிய தவமிருக்க
இந்திரன் அதை
கலைத்திட வேண்டி
தேவா கன்னிகை
மேனகையை அனுப்பிவைக்க
கானகம் அக்கணமே
வந்த மேனகை நடனம்
தவசீலன் தவத்தை
ஒரு கணம் கெடுத்து
மோக முள்ளால் அவன்
உள்ளத்தை தைக்க
மாமுனியும் மோகவலையில் சிக்கி
தவப்பயன் துறக்கின்றான்

மோகம் துன்பம் தேக்கிடும்

கானகத்தில் ராமனுடன்
வனவாசம் சென்றாள்
சீதை, அங்கோர்
அழகான புள்ளிமான்
தங்கமான் துள்ளி
துள்ளித் திரிவதைக்கண்டு
மான் மீது மோகம்கொள்ள
அக்கணமே நாதனே
அந்த புள்ளிமானை
பிடித்து வந்து நம்
பர்ணசாலையில் நிறுத்திடுவாயா
என்று மோகம் தலைக்கேற வேண்டிநிற்க
அக்கணமே ராமனும் மானைதொடர,
அருகில் பிடிக்க செல்கையில் அது
அரக்கன் மாரீசனாய் மாறி
'லக்ஷ்மண,, ஹா., என்றலர
உண்மை அறிந்த ராமன்
ஓர் அம்பால் அரக்கனை மாய்த்திட
அரக்கன் மாள, ஆனால் மாய மோகத்தில்
ஒருகணம் தன்னை மறந்த சீதையின்
கொடுச்சொல்லால் பர்ணசாலை நீங்கி
தனையனைத் தேடி லக்குவன் செல்ல
வேதியனாய் அங்கு வந்தடைந்த இராவணன்
சீதையிடம் தானம் வாங்குவதுபோல்
' இலக்குவன் போட்ட கோட்டை தாண்ட'
ராவணனாய் மாறி, அன்னையை
கள்ளமாய்க் கவர்ந்து இலங்கை நோக்கி



வின் வழியே விமானத்தில் செல்கிறான்....................

மோகத்தால் வந்த வினை இது
இது ஒரு பொருளின் மீது
வந்த மோகம் , ராமாயணம் உருவாக்கம்

இன்றும் பெண்ணின் மோக வலையில்
அகப்பட்டு, மா மேதைகள், பெரும் தலைவர்கள்
பதவி இழக்கவும் நேரிடுதே

மோகம் தவிர்த்திடலாம்
யோகத்தின் பலன் எய்திடலாம் ..............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Apr-18, 11:02 am)
Tanglish : mogam
பார்வை : 60

மேலே