செய்தித்தாள்

முழு நீள இரவினிச்
சுற்றித் திரிந்து சேகரித்த
செய்திச் சொற்கள் எல்லாம்
குளிர் விலக்கிக் கொள்ள
காகித இதழ்களில் அச்சுக்
கோர்க்கையில் உள்
நுழைந்து அதன் கதகதப்பில்
உறங்கி விடியல் தொடுமுன்
வாசகர் வாசல் தேடி
விரைகிறது #செய்தித்தாளாய்.....!

எழுதியவர் : விஷ்ணு (7-Apr-18, 6:11 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : seithithaal
பார்வை : 38

மேலே