நினைவே வந்துவிடு
உன்னுடன்
பேச
தொடங்கினேன்!
என்னுள்ளே
ஆயிரம்
மாற்றங்கள்!
உனக்காகவே
என்னை
படமெடுத்தேன்
பலவாறாக!
உன்னுடன்
குறுஞ்செய்தியை
பரிமாறும்
வேளையில்!
என்னையறியாமல்
நான்
புன்னகைத்த
தருணம்
ஏராளம்!
சுற்றிலும்
நண்பர்கள்
இருந்தும்
தனியே
அமர்ந்திருப்பேன்!
கைபேசியில்
உன்னுடன்
உரையாட!
கடைசிவரை
என்
கரம்
பற்றிருப்பவள்
நீயென்றெண்ணி!
திடீரென்ற
உன்
மெளனம்!
என்
மனதை
குலுக்கிவிட்டது!
இடிபாடெனும்
உன்
நினைவுகளால்
சிக்குண்டவனானேன்!
வாழலாம்
என
ஆசைப்பட்டதில்
என்ன
தவறு!
அர்த்தமற்ற
ஆயிரம்
காரணங்களை
கூறுகிறாய்!
உன்னை
பின்தொடருகிறேன்
நினைவுகளால்!
பெருக்கெடுக்கும்
என் கண்ணீரோ
ஒருநாள்
உன்
கால்
நனைக்கும்!