காதல்

நோய்க்கள் வந்து தாக்கும்போது
அங்கங்கள் பொலிவிழக்கக் கூடும்
உடலும் தொய்ந்து,உள்ளமும் சோர்ந்து,
பொத்தி பொத்தி போத்திவைத்த
புற அழகும் காணாமல் போய்விடலாம்;
ஆனால் போகாது ஒரு காலும்
மனதில் நிற்கும் காதல், அது
பாலை நிலத்தில் கண்ட சுனைநீர் ஒப்ப
மாசிலா தூயது ,அழிவொன்றும் இல்லாதது.

,

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Apr-18, 10:06 am)
Tanglish : kaadhal
பார்வை : 81

மேலே