அநுபவப்பாடம்

காதல், போர்வை
போர்த்திகிருச்சி
பதராது காமம்
பத்திகிருச்சி
காதல்தான் இங்கே
கருவாச்சி
மறைக்க முடியா
உருவாச்சி
பெற்றது பார்த்து
பதறிப்போச்சி
அக்கம் பக்கம்
மெல்ல அவலாச்சி
காதல் காதல்
என்றதோ
காணாமல் போச்சி
கால இடைவெளியில்
அடிமடியும்
கனத்துபோச்சி
என் மனபாரமும்
கூடிப்போச்சி
நாளும் வந்து
பாரம் இறங்கியாச்சி
குப்பையாய் அது
மாறியும்போச்சி
கண்கள் குப்பைத்
தொட்டிய
தேடிப்போச்சி
வீசிய குப்பைய
மௌனமாய்
வாங்கிக்கிருச்சு
திரும்புகையில் கால்கள்
தளர்ந்துபோச்சி
வாழும் வாழ்க்கையும்
வெறுத்துப்போச்சி
ஆறுதல் சொல்ல
ஆளில்லாது போச்சி
அட சீ இதுதான்
காதலா என்றாச்சி
அனுபவபாடம்
மனப்பாடமாச்சி
இருந்தாலும் மனசு
அன்ப தேடலாச்சி..,
நா.சே..,