வாழ்த்துகிறான் இவ் இயந்திர வாசி

மடிக்கணணியோடு வாழுமிவன்
மடி கனியே - நீ
மண் தொட்ட நாள் வாழ்த்துக்கள்

IT யில் அடிமையாய்
சிக்கியவனிடம்
சிக்கிகொண்ட அடிமை
புது உடைமை கொண்ட நாளிது

விசை பலகையோடு
கதை பேசிக்கொண்டிருப்பேன் நானும்
வதை இல்லை என்று வாழ துணிந்த வனிதையின்
புனித நாளிது

இலத்திரனியல் உலகில்
கலைத்திறன் கற்ற்பித்த
இல்லத்தரசியே;என் இளவரசியே
நீ உதித்த நாள் வாழ்த்துக்கள் ....

எழுதியவர் : யாஷி (11-Apr-18, 2:48 pm)
பார்வை : 71

மேலே