நிறைவு
உன்னை விமர்சிக்கும்
கருத்துக்களால் மட்டுமே
நிறையும் என் பரிகாசங்கள் ..
உன்னை நினைவுபடுத்தும்
நொடிகளால் மட்டுமே
நிறையும் என் நாட்கள்..
உன்னை வர்ணிக்கும்
வார்த்தைகளால் மட்டுமே
நிறையும் என் கவிதைகள்..
உன்னை துணைக்கொண்ட
நம்பிக்கையால் மட்டுமே
நிறையும் என் வாழ்க்கை!