199 பொய்யரை நம்பார் செல்லாப் பொருளும் கொடார் - பொய் 5

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
காய் 4 / மா தேமா
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

மெய்யரெனப் பெயர்பூண்டார் வறிஞரே யெனினுநிதி
..மிகவு மன்னார்
கையதனிற் கொடுத்துவைக்க எவருமஞ்சார் பொய்யரெனக்
..கவ்வை பூண்டார்
செய்யபொருள் மிகவுளா ரெனினுமவர் கையிலொரு
..செல்லாக் காசும்
அய்யமின்றி யொருவ’ர்’கொடா ரெனிற்படிறின் தன்மைதனை
..அறைவ தென்னே. 5 - பொய்

மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

”மெய் சொல்பவர் எனப் பெயர் பெற்றவர் ஏழையாக இருந்தாலும், பெரும் செல்வத்தையும் அவர் கையில் கொடுத்து வைக்க எவரும் அஞ்ச மாட்டார்கள்.

பொய் சொல்பவர் என்ற பழிச்சொல் பெற்றவர் பெரும் செல்வம் படைத்தவராயினும், அவர் கையில் ஒரு செல்லாக் காசு கூட அவர் மீது சந்தேகப்படாமல் ஒருவரும் கொடுக்கமாட்டார்கள் என்றால் பொய் பேசுபவரின் தன்மையைப் பற்றி என்ன சொல்லுவது?” என்று இப்பாடலாசிரியர் கேட்கிறார்.

கவ்வை - பழி. படிறு - பொய்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Apr-18, 9:19 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

சிறந்த கட்டுரைகள்

மேலே