வீட்டைச் சுற்றி
என்ன ஊர் இது
எது வேண்டும் என்றாலும்
அடுத்த ஊருக்குப் போக வேண்டியதாய் இருக்கிறது
என்று அலுத்துக் கொண்டவன்
இன்று குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறையில்
அமர்ந்து கொண்டு
..
குற்றால சாரல்
எங்கும் பசுமையான வயல் வெளிகள்
காலை மாலை என
தவறாமல் பாடும்
பல வகையான பறவைகளின் இசை
பூக்களை மொய்க்கும் வண்ணத்துப்பூச்சிகள்
வாசலில் அமர்ந்து ஓயாமல் கருத்து சொல்லும் முதியவர்கள்
வீட்டின் அருகிலேயே உள்ள சொந்தங்கள்
என்னுடனே எப்போதும் இருக்கும் நண்பர் பட்டாளம்
.
.
எண்ணிப் பார்க்கையில்
கண்களில் கண்ணீர் வந்து ததும்புகிறது
என்ன குழம்பு
எப்ப பார்த்தாலும்
சாம்பார் ரசம்
வேற குழம்பு தெரியாதா உனக்கு
என அம்மாவை கேட்டவன்
.
.
இப்போது அம்மா கையால்
பழைய சோறு சாப்பிட்டால் எப்படி இருக்கும்???
கையில் ரொட்டியுடன்
அப்பா நூறு ரூபாய் வேண்டும்
பாத்து செலவு பண்ணுடா
கஷ்டப்பட்டு சம்பாதித்தது
புலம்பாம கொடுக்க மட்டியே
நான் கை நிறைய சம்பளம்
வாங்கும் போது பார்
..
வெளி நாட்டில் வேலை
சுற்றிலும் புரியாத வார்த்தைகள்
கை நிறைய சம்பளம்
வேண்டுவதெல்லாம் அருகிலேயே
.
ஆனால்
உள்ளம் மட்டும் வீட்டைச் சுற்றி....