வடுக்கள் நல்லவை

வடுக்கள் நல்லவை

என் ஓவியத்தை வரையென்றால்
என்னை வடுவெல்லாம் நீக்கி
உருக்குலைத்துவிட்டாயே!
அழகான படம்! ஆனால் நானா?!
வடுக்கள் எனக்குக் கிடைத்த
வாழ்க்கைப் பாடங்களின்
புடம் போட்டு வைத்த கருவூலம்.
தடம் நினைவூட்டும் வழிகாட்டி.
பிறழும்போது தரும் பிரம்படி.
நிதர்சனத்துடன் கட்டிய சங்கிலி.
நெஞ்சுரம் குறையும்போதெல்லாம்
ஆழம் போகும் உபரி ஆணிவேர்
வழுக்குப் பாதையில் ஊன்றுகோல்.
வடுக்களை மதிக்கும் தூரிகை
வேறு கொண்டுவா ஒரு நாள்!

எழுதியவர் : திருத்தகன் (9-May-18, 1:29 pm)
சேர்த்தது : திருத்தக்கன்
Tanglish : vadukkal nallavai
பார்வை : 75

மேலே