சிரிப்பு மனித சிறப்பு

மனிதன் சிரிக்கும் போது
தூளாகிறது துயரங்கள்

சிரிப்பின் மகத்துவம்
அது வாழ்வின் ஒருவகை தத்துவம்

உள்ளம் மகிழும் நேரம்
உதடுகள் சிரிக்கின்றன

எடுத்து சிரிப்பது சிரிப்பல்ல
உள்ளூர வருவது சிரிப்பு

கோடி நன்மைகள்
சிரிப்பில் தேடி வந்திடலாம்

சிரிப்பு ஒரு தெய்வீகம்
அது சிறந்த வாழ்வின் பூர்வீகம்

எழுதியவர் : பாத்திமாமலர் (10-May-18, 1:38 pm)
பார்வை : 164

மேலே