என்ன பெத்தவளே

செத்து செத்து
பொழச்சவளே
என்ன சொத்தாக
நெனச்சவளே....!

கோயில தேடும்
உலகத்துல
என் குலசாமியா
நிற்ப்பவளே....!

அம்மானு
அழைக்கையில
அகிலமெல்லாம்
சொந்தமடி....!

அன்பா
நீ பேசையில
வந்த துன்பமெல்லாம்
வெலகுமடி....!

வக்கனையா
சோறு இருந்தும்
நீ ஊட்டும் எச்சி
சோறு போதுமம்மா....!

உசுர கொள்ளும்
பசி இருந்தும்
ஏன் பசிதான்
ஆறுமம்மா....!

பள்ளிக்கூடம்
போகயில
பல பண்பத்தான்
சொல்லிப்புட்ட....!

பாவப்பட்ட நீ
எனக்கு
உன் மொத்த உசுர
தந்துப்புட்ட....!

எத்தனையோ
உறவிருந்தும்
உன்ன போல
உறவு இல்ல....!

உன் வயசு முதிர்ஞ்ச
காலத்துல
நீ தான் ஏன்
தத்துப் புள்ள....!

அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பனம்............

உமா சங்கர். ரா

எழுதியவர் : உமாசங்கர். ரா (13-May-18, 9:36 am)
சேர்த்தது : உமா சங்கர் ரா
Tanglish : yenna pethavalae
பார்வை : 1801

மேலே