முகத்தில் முகம் கண்டேன்
முகம் பார்க்கும் கண்ணாடியில்
இன்று நான் என் முகம் பார்க்க
அதில் என் முகம் காணவில்லை
வஞ்சியே உன் முகம்தான் அதில்
கண்டேன் நான், பின் தெளிந்தேன்
என் இதயத்தில் இருக்கும் உந்தன்
பிம்பமல்லவோ அங்கு என் முகத்தை
மறைத்துவிட்டது உன் முகமாய்.