என் கணவன்
அறியா பிள்ளை என்னை கரம் பிடித்தார்
அருகிருந்து அம்மையப்பனாய் காத்து நின்றார்
நல்லாசானாய் பொதுஅறிவு கற்றுத் தந்தார்
நம்பிக்கை தந்து தன்னம்பிக்கையை வளர்த்து விட்டார்
பிள்ளை வளர்ப்பில் பேருதவி செய்திட்டார்
பெருமைகளை எனக்கே தந்து மகிழ்ந்தார்...........
கண் கண்ட கணவனே
காலமெல்லாம் உம்முடனே இருந்திடணும்
குறிப்பறிந்து உங்கள் சேவை செய்திடணும்
குறைவின்றி உமது நலன் பேணிடணும்
ஒற்றுமையாய் குடும்பம் வாழ்ந்திடணும்
நம்மைசுற்றி குதூகலம் நிறைந்திடணும்
என் வேண்டுதலை சங்கரனும் கேட்டிடணும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
