அவள் அழகில் மயங்கிய வண்டு
அவள் செவ்விதழ்கள் இரண்டை
அன்றலர்ந்த செம்பருத்தி என்று
எண்ணி வந்தமர்ந்த கருவண்டு
அவள் கண்ணிரண்டை தாமரையோ
என்று மயங்கி அங்கு செல்ல
மங்கையவள் ,கார்க்கூந்தலில்
சூட்டியிருந்த குண்டுமல்லி
பூச்செண்டின் வாசத்தில் மிக்க
மயங்கி பின்னர் அங்கு சென்று
ஒன்றும் புரியாது சுற்றிவர, அதற்கிடையில்
அங்குவந்து நான் சேர
என்ன நினைத்ததோ வண்டு
பூவையை விட்டுக்கொடுத்ததுவோ
எனக்காக , பெரும் ஓசை ஒன்றெழுப்பி
அங்கிருந்து பறந்து சென்றுவிட
என்னவள் அழகில் மயங்கும் வண்டாய்
அவளை வந்தடைந்தேன் நான்