என்ன சொகத்த கண்டேன்

உன்ன கல்யாணம் பண்ணி
என்ன சொகம் கண்டேன்....

மனைவி

உன்னைய கல்யாணம் பண்ணி
நான் மட்டும் என்னத்தக்
கண்டேன்....

கணவன்

..ம்..ம்.. பெத்துப்போட்டேனே
ஏழெட்டு வெட்டிப்பய உனக்கு
பத்தாது....

மனைவி

உன்னக் கட்டுனப்பாவத்துக்கு
சம்பாரிச்சி கொட்டுறேனே
பத்தாது....

கணவன்

"ஆமாமா... கட்டு கட்டா
அடுக்கி வெச்ச அதுல நாலு
கட்டெடுத்து நகை பாதி
பட்டுச்சேல பாதினு எடுத்து
வெச்சிருக்கேன்.... கட்டி கட்டி
பாக்குறதுக்கு...."

மனைவி

"நீ பட்டுச்சேலயா... கட்டிப்பாக்க
சீர்செனத்தியா செஞ்சான்
உங்கொப்பன்...."

கணவன்

"எங்கப்பனப்பத்தி பேச
உனக்கென்னய்யா
துப்பிருக்கு...ஒண்ணுமில்லாத
உனக்கு பொண்ணு
கொடுத்தார்பாரு....

மனைவி

"கொடுத்தாங்...கொடுத்தான்
நான் கேட்டதெல்லாமா
கொடுத்தான்... உன்னைய
மட்டும் கொண்டு வந்து
சேர்த்தான்...."

கணவன்

"உங்கொப்பன் மட்டும்
என்னத்த வெச்சிட்டுப் போனான்....
குந்த ஒரு கூரை யில்ல
படுத்து எந்திரிக்க பாய் இல்ல
உங்க பொழப்பே நாறிச்சி...
எங்கப்பனப் பத்தி பேசுற...."

மனைவி

உன்னைய எனக்கு
பொண்டாட்டியா கட்டிவெச்சாம்பாரு அத
சொல்லணும்டி....

கணவன்

நல்ல நாளு கெட்ட நாளுனு
எனக்குண்டா...
சொந்த பந்தத்த பாக்கத்தான்
போனதுண்டா...
கட்டி வச்ச நாள் முதலா உன்
காலடில கெடக்குறேன்
இப்டி காஞ்சி கெடக்குறியே..
கண்டபடி எங்குடும்பத்த
பேசுறியே...

மனைவி

சரி சரி மூக்கச் சிந்தாத
கழனில மாடு கத்துது
போய் என்னானு பாரு...
ரெண்டுமணி ஷிப்டுக்கு
போகணும்....

கணவன்

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (21-May-18, 1:58 pm)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 104

மேலே