பெண்
பெண்ணா
இவள் என
அதிசயித்து பார்க்கும்
என்னிரு கண்கள்
சின்னங்சிறு பிறையைபோல் இருக்கும்
நெற்றியின் அழகை கண்டு
கருநிற கூந்தல் ஒதுங்கி நின்று
ரசிக்கின்றது
காதின் ஓரத்தில் இன்னிசைக்கு
நடனமாடும் இரு ஜிமிக்கிகள்
அவள் சிரிப்பொலியில்
ஆடி ஆடி ஆனந்தமாயிருக்க
தென்றல் காற்றோ
அவளுக்கென பிறந்தாற்போல
இவள் இரு கண்களில்
மோத ஆசைப்பட்டு
ஏங்கி தவிப்பதை
கண்டேன் !!!!