உன்னிடத்தில்
பிறப்பில் தெரியாமல்
வயதில் உணராமல்
உன் முதல் பார்வையில்
என் பெண்மை அறிந்தேன்...!!!!
நீ திரும்பி சென்ற நொடியில்
மீண்டும் ஒரு பார்வைக்காக
என் பெண்மை விரட்டி....!!!
அலைபேசியில் உன்னை அழைத்து
உன் ஓசை கேட்டேன்
எங்கோ எனை மறந்தேன்...!!!
கிடைத்து விட்டேன் என்னிடத்தில்
நீ உன் அலைபேசியை துண்டித்த பொழுது...!!!
தவிக்கின்றேன் மீண்டும்
நான் தொலைந்து செல்ல...!!!
அழைப்பாயா ...!!!
இன்று திக்கு தெரியாமல் தவிக்கின்றேன்
என் ஓசை உனக்கு புரியாமல்
தயவு செய்து ஆராய்ந்து பார்
என் இதயத்தை உன்னிடத்தில்....!!!