அந்த கள்வன்

கண் விழிக்கும்போதும்
முகம் பார்க்கும்போதும்
பல் துலக்கும்போதும்
குளிக்கும்போதும்
ஆடையணியும்போதும்
கனவாய்....
கண்ணாடியாய்....
பற்பசையாய்....
இதமான வெந்நீராய்..
ஆடையாய்....
மாறியென் மனதிற்குள்
நுழைந்து விடுகிறான்
அந்த கள்வன்!
நடக்கும்போதும்
பார்க்கும்போதும்
சுவாசிக்கும்போதும்
பயணிக்கும்போதும்
சிரிக்கும்போதும்
தரையாய்....
காட்சிபொருளாய்....
தென்றலாய்....
பயணமாய்....
புன்னகையாய்....
அவன்தான் இருக்கின்றான்
என்னைக் காதலை ரசிக்க
அழைக்கின்றான்!
படிக்கும்போதும்
எழுதும்போதும்
பேசும்போதும்
கேட்கும்போதும்
நினைக்கும்போதும்
பாடமாய்....
எழுத்தாய்....
உரையாடலாய்...
இனிக்கும் நற்செய்தியாய்....
நினைவாய்....
அவன்தான்!
அவனேதான்!
இடம்பெறுகிறான்!
என் இளமையை
ஆட்சி செய்கிறான்!
அந்த கள்வன்!
என் காதலன்!