நட்பினால் தடுமாற்றம்

நட்பினால் தடுமாற்றம்...

உண்மை நண்பர்கள் மிகக் குறைவான காலம் மட்டுமே வாழ்வில் உடனிருக்கிறார்கள்...

நட்பென்று நம்ப வைத்து, அதிகமான துரோகிகளையே காலம் அனுபவமாக தருகிறது...

நட்புக்கு ஏங்கும் நேரங்களில், நம்மை உபயோகிப்பவர்கள் பெருகிவிடுகிறார்கள்...

ஆழமான நட்பை கனவுகளில் காட்சிகளாக கண்டு திருப்தி அடைகிறேன்...

இன்பமாக கிடைக்கும் நண்பர்கள்கூட பெருமை என்னும் நோய்வாய்ப்பட்டு தவிக்கவிட்டுப் போகிறார்கள்...

சிலநேரம் சமுதாயம் பாலினம்கொண்டு தரம்பிரித்து சில நட்புக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது...

கண்ணீர் துடைப்பவனையும், கரம்பிடித்து தூக்குபவனையும் முகமறியா நட்பாகக்கொண்டு நாட்களை நகர்த்துகிறேன்....

எழுதியவர் : ஜான் (8-Jun-18, 2:50 am)
பார்வை : 559

மேலே