525 கரவுரை கைக்கொள்ளல் கண்மூடிச் சுவர்ஏறல் – பன்னெறி 5
அறுசீர் விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)
அத்திசூ ழுலகிற் சில்லோர்
அகத்தொன்றும் வாக்கி லொன்றும்
வைத்திதஞ் சொலலால் யாவும்
வனச்செவி யேற்ப தன்றிச்
சத்திய மெனக்கொண் டேகல்
சக்கினை மூடி நீண்ட
பித்திகை யேறிச் செல்லும்
பேதைமை நிகர்க்கு மாதோ. 5
– பன்னெறி
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
poruLurai:
கடலால் சூழப்பட்ட உலகத்தில் சிலர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று இனிமையுற உரைப்பர். அவர்கள் உரைப்பனவற்றை அழகிய காதால் கேட்பதல்லாமல் மெய்யென்று கொள்ளுதல் கூடாது. அப்படிக் கொண்டால் கண்களை மூடி உயரமான சுவர் ஏறிச்செல்லும் அறிவிலான் ஆவன்.
அத்தி-கடல். வனம்-அழகு. சக்கு-கண். பித்திகை-சுவர்.