எட்டுவழிச் சாலையும் எட்டப்பனின் வேலையும்

எட்டுவழிச் சாலையொன்றும் தொட்டுச்செல்ல ஆசையில்லை
பட்டுப்போன இலையல்ல கெட்டுவீழ்ந்து ஓசையெழ...

ஆண்மையற்ற அரசியலார் அளவற்ற தேசமிதில்
உண்மைகளை உரமாக்கிய ஆளவந்த வேசநரிகள்...

வறண்டநிலம் மழையின்றி மடைநிறைக்க ஏற்பதில்லை
பிறப்பிடத்தே பிழையன்றி உடைவாளோ தோற்ப்பதில்லை...

திட்டம்மொன்று தீண்டிடவே சட்டமென்ற தூண்டுகோலா
பட்டம்வென்ற பாண்டவரே எட்டநின்று வேண்டிக்கொள்க...

இளங்காளைகள் துணைசேர இருப்பிடமும் தொலைந்துபோகும்
குளக்கரையில் அணைபோட குருதியோடும் மலைமுகத்தே...!

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (20-Jun-18, 8:22 pm)
பார்வை : 87

மேலே