நீயென்ன அழகிய அரக்கியா
பெண்ணே , பெண்ணே
உன் முகத்தில் வான் நிலவு
உன் புருவத்தில் வானவில்
உன் வதனத்தில் பிறை நுதல்
உந்தன் விழிகளில் நதியில்
தாவும் கயல்கள் -உந்தன்
நடை அழகில் அன்னமும்
ஆடும் மயிலின் சாயலும்
தவழும் கொடியில் உன் இடையும்
உந்தன் பார்வையில் மின்னல் கொடியும்
அதரத்தில் பவளமும் பற்களில் முத்துக்கள்
கூந்தலில் கார்மேகம்
இப்படி உந்தன் அங்கங்களில்
இயற்கையின் அங்கங்கள்
ஒவ்வொன்றும் காண்கின்றேனடி
ரசித்து ரசித்து மகிழ்கின்றேன்
நீயோ என்னை உன் ரசிகனை
ஒருபோதும் கண்டுகொள்வதே இல்லை
ஒரு கிள்ளுகீரைபோல் கண்டும் காணாதுபோல்
நீயென்ன இப்படி என்னை வதைக்கவந்த
அழகிய அரக்கியா ..........