சத்தம் போடாதே

அவளைப்
படுக்கை அறைக்கு அழைத்தது - சற்று
தயக்கமாகத்தான்
இருந்தது
திருப்பங்களின் நடுவே
புரட்டும் வேலையில் வரும்
சத்தங்கள்
மென்மையைச் சிந்திக்க வைத்தன
ஒவ்வொன்றையும்
ஆராய்ந்துப் பார்ப்பதில்
நிமிடங்களின் கரிசனை
வேகத்தின் உச்சியில் தவழ்ந்தது
இப்போது மணி
பன்னிரண்டு
புத்தகத்தை மூடி வைத்துவிட்டு
தூங்கிவிட்டேன்....