தேச நேசம்...
நம் நாடு
வல்லரசு ஆவது
முக்கியம்...
ஆனால்
அதற்க்கு முன்...
நம் நாட்டை
நல்லரசு ஆள்வது
தான் முக்கியம்...
தசைகள்
வலுவானால்
தேகம் வலுவாகும்...
திசைகள்
வலுவானால்
தேசம் வலுவாகும்...
என்ன வளம்
இல்லை...இந்த
திரு நாட்டில்...
ஏன் கைகள்
ஏந்த வேண்டும்
அயல் நாட்டில்...
கவி சொன்னார்
அன்று...
எண்ணெய் வளம்
இல்லை...இன்று
நம் நாட்டில்...
நம் கைகள்
பொறுக்கவில்லை
அந்த சூட்டில்...
எனவே...
உண்மைச்சுதந்திர
உணர்வு பெற...
நாடு வலுப்பெற...
நாமெலாம்
கை கோர்ப்போம்
இங்கு...
ஊழலுக்கு ஊதுவோம்
சங்கு...
என்றும்
தேசம் நேசிப்போம்...