அனாதை
அம்மா என்ற சொல்லிற்கே
அன்பு என்றுதான் அர்த்தம்
என்றிருக்க என்னை நீ
நான் பெண்ணாய்ப் பிறந்ததால்
குப்பைத் தொட்டியில்
எறிந்துவிட்டு சென்றுவிட்டதேனோ
இந்த அனாதை ஆஸ்ரமத்தில்
நான் வளர்ந்து ஆளாகிவிட்டேன்
ஒரு பெண்ணாய் இப்போது
என் சரித்திரத்தை அறிந்துகொண்டேன்
எனக்கும் ஒரு தாய் உண்டு
தந்தையும் ............ஆனாலும்
என்னை குப்பையாய் அவர்கள்
எறிந்துவிட்டுபோனதேனோ தெரியவில்லை
நான் அனாதையாகவே வளர்ந்துவிட்டேன்
என் நெஞ்சம் அன்பிற்கு ஏங்குகிறது
தாயின் அன்பிற்கு ..............
என்னை அனாதையாய் விட்டு விட்டு
சென்றவளை நான் காணமுடியதுதான்
அப்படி என்னை கண்டுகொள்ள ஒரு
நாள் இங்கு தேடி வருவாளோ .............
அதோ எனக்கு அடைக்கலம் தந்த
குப்பைத்தொட்டி அதோ இன்னும்
இந்த ஆசிரமத்து பக்கத்தில்...............
அதை நான் அம்மா என்றழைக்கவா
இல்லை அங்கிருந்து மீட்டு எனக்கு
ஆதரவு தந்து வளர்த்த இந்த
ஆசிரமத்து அன்னையை அம்மா
என்றழைக்கவா......
இருவரையும்தான் ....என் உள்ளம்
சொல்கிறது ................
ஒன்றுமட்டும் நாள் சொல்வேன்
எனக்கோர் மகள் பிறந்தால்
அவளை ஒருபோதும் நான்
அனாதையாய் விடமாட்டேன்
உயிருள்ளவரை என் அன்பு
கரங்களில்தான் அவளை
வளர்த்திடுவேன் .............
அனாதைக்கு மட்டுமே புரியும்
அன்பின் தாக்கம்!