வெற்றியின் பெறுவதன் நோக்கம்

முந்தானை கருவறையில்
பெண்ணை வென்று
நான் கண்ட முதல் வெற்றி
யாரையும் வீ ழ்த்த அல்ல
நான் வாழ ...........................!!!!!!!
மண்ணை முட்டி முட்டி
முளைக்கும் விதையின் வெற்றி
யாரையும் வீ ழ்த்த அல்ல
தான் வாழ ...........................!!!!!!!
பூக்களை தட்டி தட்டி திறக்கும்
தென்றலின் வெற்றி
யாரையும் வீ ழ்த்த அல்ல
பூவின் வாசம் வாழ ...........................!!!!!!!
சிலையை தட்டி தட்டி திறக்கும்
உளியின் வெற்றி
தான் வாழ அல்ல
கலைவாழ....................!!!!
பெண்ணை கட்டி கட்டி வீழ்த்தும்
ஆணின் வெற்றி
அவன் வாழ அல்ல
அவனின் இனம் வாழ .........!!!!!
வெற்றி பெறுவதன் நோக்கம் யாரையும்
வீழ்த்துவதல்ல
எல்லோரையும் வளமுடன் நலமுடன்
வாழ்விப்பது .............!!!!!