யார் செய்த தவமோ

எங்கள் வீட்டு செல்ல குட்டி
நீல வானம் நிறம் மாறி
எங்கள் வீட்டு தாழ்வாரத்தில்..
சிறகு இல்லாத பறவைகள் மூன்று
அங்குமிங்குமாய் தவழ்ந்தபடி!!
நிறம் மாறியது வானம் மட்டுமே தவிர
சிறகு இல்லாதது பறவைகள் தானே தவிர
மகிழ்ச்சிக்கும் மாசற்ற அன்பிற்கும்
பஞ்சம் என்ற சொல் கூட இல்லை
காரணமிருப்பின் கவலையற்ற
வாழுகையும் கண்ணீர் அற்ற கண்களுமாய்
அப்பறவைகளை தூக்கி சுமப்பதும்
தாங்கி பிடிப்பதும் பெற்றோரல்லோ !!!
காலம் கடக்க
அம்மூன்றிற்கும் சிறுகு முளைக்க..!!
இரைதேட சென்ற முதல் பறவை
பாடப்படிப்பில் இரண்டாம் பறவை
பருவம் வந்த மூன்றாம் பறவை
பருவம் வந்தது மங்கையென்றதாலோ
இல்லை உயரப்பறக்க வேறு துணை வேண்டும் என்றோ
அறியாத மனபுதிரில் அகப்பட்ட குருதி பறவைகள்
எதிர் பாராதோருநாள்
அவள் துணை கைப்பற்றி குடும்பம் வேண்டாமென
பெற்றோர் முன்பும் அன்பர்கள் முன்பும்
பறந்து சென்றது !!
யார் செய்த தவமோ !!!