பழமொழியின் பண்புகள்
பழமொழி
தொட்டில் முதல் சுடுகாடு வரை
தலைமுறைகள் கடந்து
மனித குலத்திற்கு வழிகாட்டியாய்
வலம் வரும் நீதிமொழி...
பழமொழி
விதையின்றி விருட்சமாகி
அறநெறியை அள்ளித்தரும்
கற்பக விருட்சம்...
பழமொழி
பாமரனும் புரிந்து
அதை தன்வாழ்க்கையில் புகுத்தி
இன்புற்றே வாழ வழிச்செய்யும்
அருள்மொழி...
பழமொழி
தீபச்சுடரை தொட்டு
கை சுட்டு அறியும் பட்டறிவை
கை சுட்டுக்கொள்ளாமலே
தீபச்சுடரின் குணத்தை உணர்த்தும்
அனுபவமொழி..
பழமொழி
பிரம்ச்சரியம் இல்லறம்
வானபிரஸ்தம் சன்னியாசம்
என எல்லா வாழ்க்கை
நிலைகளிலும் நல்வழிகாட்டும்
அமுதமொழி...
பழமொழி
பித்தனையும் சித்தனாக்கும்
சிந்தனையை தெளிவாக்கும்
வற்றா நீரூற்றுப்போல்
வாழ்க்கையை செழுமையாக்கும்...
பழமொழி
ஒரு பானைச்சோற்றுக்கு
ஒரு சோறு பதம்
இதோ அந்த ஒரு சோறு
காற்றுள்ளப்போதே தூற்றிக்கொள்...