காதல்

காதலென்பது உலகில்
இயங்கும் சக்திகளிலெல்லாம்
தலையானது-இருவேறு
உள்ளங்களை பிணைக்கும்
மாபெரும் சக்தி காதல்
இத்தனையேன்,கற்பனைக்கெட்டா
அற்புத சக்தி அந்த
இறைவனையும் நம்மோடு
பிணைக்கும், நாம் அவன் மீது
கொள்ளும் காதல்
ராதை கண்ணனுடன்
உறவாடுகின்றாள் முடிவில்
அவனோடு இரண்டராக் கலந்து விடுகிறாள்
இதில் ராதையே ஜீவன்
கண்ணன் பரமன்
அன்பின் வழியது உயிர்நிலை
அதுவே காதல்.
அதனால்தான் காதல் இல்லையேல்
சாதல் என்றனரோ......

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Jul-18, 4:50 pm)
Tanglish : kaadhal
பார்வை : 233

மேலே