முதலிரவு மூன்றாம் சாமம்...

சன்னலுக்கு வெளியே மின்னும்
மின்சார விளக்கு வெளிச்சத்தை
தாகந்தீரப்
பருகிக் கொள்கிறது
திரைச் சீலை...

ஒட்டிப்பிறந்த பெட்டிகள் போல
உடனிருந்த நமது கைப்பேசிகள்
காணாமூலையில்
கண்சிமிட்டியபடி
கேட்பாரற்று கிடக்கின்றன...

காணாமல் போய்விட்ட
திராச்சைப் பழங்களை பற்றி
விதைகளிடம் விசாரிக்கிறது
பலகாரத் தட்டு...

அவிழ்த்து எறியப்பட்ட
நமது ஆடைகளொடு
கிசுகிசுப் பேசுகிறது
மேசை நாற்காலி...

அரை நாளிகைக்குமுன்
நாம் போட்ட காதல் சண்டையை
கண்டுகொள்ளாதது போல
தனது கடமைச் செவ்வனே
செய்கிறது மின்விசிறி...

உன்னையும் என்னையுபோல்
களைப்படையாமல்
இன்னும் ஓடிப் பிடித்து
விளையாடுகின்றன
கடிகார முட்கள்...

கருமையான அறைக்குள்
மின்னும் சின்னக் குண்டு பல்பின்
பிரகாசத்தில் மிளிர்கிறது
உனது வியர்த்த முதுகு...

உன் கூந்தலை கொண்டாடித்
தும்முகிறது
எனது நாசிகள்...

என் மார்புக்குள் நீ
புதைந்து கொள்ளும் போது
உன்னை முத்தமிட
முரண்டு பிடித்து
முட்டுகிறது என்னிதயம்....

உன் முழங்கைக்கு
முடிச்சிடக் கற்றுக் கொடுக்கிறது
எனது இடுப்போர இடைவெளி....

உன் பருத்த மார்புகளோடு
மல்யுத்தம் புரிகிறது
எனது சின்னத் தொப்பை....

உன்னை இடுப்பளவு இழுத்துக்
கொண்டு பிணைத்துக்
கொள்கின்றன
எனது கால் இடுக்குகள்...

உனது கெண்டைக் கால்களில்
வெள்ளைக் கொண்டையாய்
வெளுத்துக் கிடக்கிறது
எனது வெடிப்புகளில்லா
பாதச்சுவடுகள்...

உனது பிட்டங்களின் மேலே
கொட்டகையிட்டுக் கிடக்கிறது
எனது கைவிரல்கள்...

ஆழ்ந்து அயரும் உன்னை
அணைத்தபடிக் கிடக்கிறது
உயிர்...

உனக்குள் ஊர்ந்து
ஊடுருவி உருகிய என்னை
உயிரெனக் கட்டிக்கொண்டு
உறங்குகிறாய் நீ...

உருப்படாத ஓராயிம்
இரவுகள் தாண்டி
உன் கரு புகுந்த இந்நாளுக்குள்
மீண்டும் காணாமல் போக...
கொஞ்சம் தயங்கித் தயங்கி
உன் கண்ணத்தைக்
கொஞ்சிக்கிள்ள
கழுக்கென்ற சினுங்களோடு
வெட்கிச் சுருங்குகிறாய் நீ...

அடியே....!!!

நீ இன்னும் தூங்கலயா....?!!

என்ற ஆச்சரிய
ஆரிப்பரிப்போடு
சுருங்கியவளை விரித்து
சொற்கம் அழைக்கிறேன்
நான்...

~☆~

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன... 💐

எழுதியவர் : முத்தரசு மகாலிங்கம் (13-Jul-18, 9:41 am)
சேர்த்தது : முத்தரசு
பார்வை : 85

மேலே