காதல் குழந்தை
சிறுகுழந்தை போல் உன்னை தேடி வந்த எனக்கு
நீ குடுத்த பரிசு கண்ணீர்,
ஆசையாக உன்னை தேடி வரும்போது
உனது அன்பு முகத்தால் என்னை அழவைத்து விட்டாய்
நான் கண்ணீர் சிந்தும் நொடியில் கூட நீ என்னை நினைத்து
கவலை படவில்லையே ஏன் ,உனது கைப்பிடிக்க நினைத்த
எனக்கு கடைசியாக மிச்சியது உனது கல்யாண பத்திரிகை.