படைப்பின் ரகசியம் யாரறிவார்

தாயின் வயிற்றுக்குள்
வந்த பிண்டம் -எப்படி
சதை,தசை எலும்பு
என்று இவைப்பெற்று
தலையாய்,தலைக்குள்
மூளையாய், கண்களாய்
மூக்கு,காது,வாயாய்
மார்பாய், மார்புக்குள்,
நுரைஈரல்,உயிர் மூல
இதயம், மற்றும் வயிறாய்
அதற்குள்,ரத்தம் செய்ய
கல்லீரல்,உணவு செரிக்க
இரைப்பை,கழிவை வெளியேற்ற
மண்ணீரல்,சிறுநீரகம்
பெருங்குடல் என்று வினோத
உடலுறுப்புகள் என்று மாறி
இவைகள் இயங்கி பணி செய்ய
இவற்றிற்குள் எங்கோ
உயிராய் இருந்து
இயங்கவைத்து, கை ,கால்கள்
தந்து,நடக்க,ஓடவைத்து
சிந்தனையும் தந்து
சிந்திக்கவைத்து,
தாயின் வயிற்றிலிருந்து
பத்து மாதங்கள் கழித்து
வெளிவரும் இந்த
வினோத 'ரோபோ'
மனிதன்-இதன்
'உருவாக்கும் 'வடிவமைப்பு
பொறியாளர்' ஒருவர்
உண்டா இல்லையா
இதை யோசித்துப்பாருங்கள்
உமக்குள் உறங்கிடும்
'ஆன்மிகம்' அரவம்போல்
படமெடுத்து ஆட துவங்கும்
நாத்திகம் அற்றுப்போய்!

படைப்பில் உயிரற்றது
என்பது ஏதுமில்லை
ஒவ்வொன்றிலும் 'அவன்'
உள்ளிருந்து ஆட்டிவைக்கிறான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Jul-18, 3:10 am)
பார்வை : 98
மேலே