நூரி Noori தேயிலைத் தோட்டத்தில் நடந்த கொலை

கொழும்பில் இருந்து அவிசாவலை ஊடாகத் தெரினியாகல என்ற ஊருக்கு போவதற்கு 73 கி. மீ பயணிக்க வேண்டும் . மேலும் அங்கிருந்து 14 கி. மீ மலைப்பகுதியில் பாம்பு போல் வளைந்து செல்லும் B93 பாதையூடாக பயணித்தால் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலைத் தாண்டியவுடன் வருவது நூரி தேயிலைத் தோட்டம். இத் தோட்டம் இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றான சப்ரகமுவா மாகாணத்துக்குள் அடங்குகிறது.

தரம் உயர்ந்த தேயிலை வளரும் நூரி தேயிலை தொட்டத்துக்கு என ஒரு வரலாறு உண்டு. பிரான்சிஸ் அடமேலை (Francis Adamale) என்பவர் காடாக இருந்து இடத்தில் தனக்குப் பிறந்த நூரி என்ற மகளின் நினைவாக பல வருட கடும் உழைப்பினால் தோற்றுவிக்கப் பட்ட தோட்டம் நூரி. அரேபிய மொழியில் நூரி என்பதன் அர்த்தம் “எனது ஒளி” என்பதாகும். கடல் மட்டத்துக்கு சுமார் 400 அடிகள் உயரத்தில் உள்ள இந்த தேயிலைத் தோட்டத்தை வோல்டேர்ஸ் பே (Walters Bay) அமெரிக்க நிறுவனம் அரசிடம் குத்தகைக்கு எடுத்து பரிபாலனம் செய்து வருகிறது . அதனால் அமெரிக்காவுக்கு இங்கிருந்து தரமான தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது .

இந்த தோட்டம் காலப் போக்கில் அரசியல்வாதிகளின் ஆதரவுள்ள காடையர் கூட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் சில வருடங்கள் இருந்து சீரழிந்து போய் இலங்கையின் சட்டத்தினால் அரசு மாறியவுடன் , அழிவில் இருந்து மீட்கப் பட்டது. இத் தோட்டத்தின் வழியே சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்பவர்கள் 12 கி மீ தூரத்துக்கு காட்டு வழியே சிற்றாறுகள் ஓடும் பாதை வழியே 1700 அடிகள் உயரத்துக்கு நடந்து செல்வதுண்டு . தோட்டத்துக்கு அரேபிய மொழியில் நூரி என்பதன் அர்த்தம் “எனது ஒளி” என்பதாகும். தொட்டத்தில் 5 அடி உயரமுள்ள சிறு நீர்வீழ்ச்சியுண்டு


2000 ஆம் ஆண்டுக்குப் பின் ஒரு கால கட்டத்தில் நூரி தேயிலை தோட்டத்துக்கு சுப்பீரிண்டேன்டனாக (பெரிய துரை) போக மறுத்தனர். காரணம் அங்குள்ள அரசியல் செல்வாக்கு உள்ள காடையர் கூட்டத்தோடு பரிபாலனம் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. அக் காடையர் கூட்டத்துக்கு தெரினியாகல நகர சபையின் தலைவர் 'அத்த கொட' என்ற அடைப் பெயருள்ள அனில் சம்பிகா விஜேசிங்க (Anil Champika Wijesinghe alias ‘Atha Kota’) பொறுப்பாக இருந்தான். அவன் வைத்தது தான் அந்த ஊரில் சட்டம். அவன் தன் இஷ்டப்படி அனுமதி இன்றி தன் இனத்தவர்களை கொண்டு தேயிலை கொய்து விற்றான் . அதுவுமல்லாம் தோட்டத்தில் உள்ள மரங்களை அனுமதி இன்றி வெட்டி விற்றான். தொட்டத்தை அபிவிருத்தி செய்யும் வேலைகளின் ஒப்பந்தங்களை தனக்கு குறைந்த விலைக்கு தர வேண்டும் எனத் தோட்டத்துக்கு போறுப்பாக இருந் சுப்பீரிண்டேண்டன் மாரை நிற்பனித்தான்.

அங்கு வேலை செய்தவர்களை தன் கட்டளைக்கு 'அத்த கொட' அடி பணிய வைத்தான். தோட்டத்தில் வேலை இல்லாது, போதை மருந்து பாவிக்கும் சிங்கள. தமிழ் வாலிபர்கள் அவனின் கூட்டத்தில் சேர்ந்தனர். தோட்டத்தில் வேலை செய்த சில பெண்களை அக் கூட்டம் கற்பளித்தது. பொலீசுக்கு ஊர் வாசிகள் செய்த முறையீடுகள், செவிடன் காதில் சங்கு ஊதினது போலாயிற்று. போலீஸ் ஸ்டேசனுக்குப் போறுப்பாக இருந்த இன்ஸ்பெக்டர் சில்வா அரசியல் தலையீட்டுக்கு பயந்து நடவடிக்கை எடுக்க தயங்கினார். அவருக்குப் பின் அங்கு மாறுதலாகி வந்த கண்டிப்பான இன்ஸ்பெக்டர் பெரேரா காடையர் குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போய் 19 நாட்களில் வெகு தூரத்துக்கு மாற்றப் பட்டார் . ஊடக வியலாளர்கள் அங்கு சென்று நிலமையை பற்றி விளக்கி எழுதத் தயங்கினார்கள் . ஆனாலும் ஒரு சிங்கள ரிபோர்ட்டர் மட்டும் துணிந்து சில ஊர்வாசிகளை நேர்கண்டு எழுதியதில் குறிப்பிடப் படவேண்டியவை சில உண்டு .

தெரினியாகலவில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதும அதா கொடவின் தொழில்களில் ஓன்று . ஊர்வாசிகளை வற்புருத்தி குடிக்க வைப்பான். மறுப்பவர்களுக்கு அடி கொடுப்பான். அவ்வூரில் பத்மகுமார ஒரு விவசாயி. பல ஏக்கர் விவசாய காணி வைத்திருந்தான். அந்த காணியை மிகக் குறைந்த விலைக்கு அவனின் அறுபது மில்லியன் ரூபாய் பெறுமதியான 50 ஏக்கர் காணியை தனக்கு பத்து மில்லியன் ரூபாயுக்கு தரும்படி அந்த விவசாயியை அதா கொட வற்புறுத்தினான். விவசாயி முடியாது என்று மறுத்த பொது அவனைக் கடத்தி சென்று கொலை செய்தான்
அதா கொடவுக்கு எதிரான முறைப்பாடுகளுக்கு தெரினியாகல பொலீசில் ஒன்றுமே செய்ய செய்ய முடியவில்லை. காரணம் அவனின் நணபர் சப்ரகமுவமாகாணத்தின் முதல்வர் ஹேரத் என்பவர். அவர் ஜானதிபதி மகிந்த ராஜபக்சாவின்ஆதரவாளன் .

பிரேதேச சபை சேர்மனாக பதவிக்கு வந்ததும் 'அத்த கொட, தன் காடையர் குழு மீத நடவடிக்கை எடுக்க தேவையில்லை என போலீஸ் கட்டளை இட்டார் . அவரின் மனைவி, மைத்துனி , சகோதரனுக்கு பயந்து ஊர்வாசிகள் வாழ்ந்தனர். சுருக்கச் சொன்னால் ஒரு குடும்பமே காடையர் கூட்டமாய் நூரி தொட்டத்தை ஆட்சி புரிந்தது என்றே சொல்லலாம். அதோடு போதை வஸ்து வியாபாரமும் நடத்தினார்கள்.

.
இலங்கையில் உள்ள தெயிலைத் தோட்ட மனேஜர்களின் சங்கத்தில் 71 வயதுடைய நிஹால் பெரேரா ஒரு அங்கத்தினர். பல தோட்டங்களில் 45 வருடங்களுக்கு மேல் சுப்பிரீண்டேண்டனாக சேவை செய்து அனுபவம் வாய்ந்த அவர், நூரி தோட்டதுக்கு மாற்றலாகி சென்றார். அவருக்கு அங்குள்ள பிரச்சனை நன்கு புரியும். தன் உயிரைப் பணயம் வைத்து 2013 ஆம் ஆண்டு ஜனவரியில் நிஹால் பெரேரா அத்தோட்டத்துக்கு சுப்பிரீண்டேண்டன்டாக சென்றார். அவர் பதவி ஏற்ற சொற்பகாலத்தில் 'அத்த கொட' வின் அடாவடித் தனத்தை எதிர்த்து நின்றார். நூரி தெயிலை தோட்டத்து சவாளை 71 வயதுடைய நிஹால் பெரேரா ஏற்று 2013 ஜனவரியில் திகதி சுப்பிரரீண்டேண்டன் ஆனார்.

2013 பிப்ரவரியில், அத்த கொட மற்றும் இரண்டாவது குற்றம்சாட்டப்பட்ட அமீலா தொழிற்சாலையில் விறகையை வழங்குவதற்கான ஏகபோகத்தை எடுத்துக் கொண்டார்கள். மற்றும் ஈரப்பதத்திற்கு விறகின் எடையிலிருந்து ஒரு சதவீதத்தை குறைப்பதற்காக தொழிற்சாலை நிர்வாகத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான் அத்த கொட.
2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த குழுவிலிருந்து நிஹால் பெரேரா முதல் சவாலை சந்தித்தார். அத்த கொடவுடன் தொழிற்சாலைக்கு விறகு வழங்குவதைப் பற்றி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நிஹால் பெரேராவை அவர்கள் தாக்கி அவரின் காலை முறித்தனர்

நிஹால் பெரேராவுக்கு துன்பகரமான சம்பவம் 2013 ஆம் ஆண்டு ஜூலை 05 ஆம் திகதி நடந்தது. நிஹால் பெரேரா வழக்கமாக தோட்டத்தை சுற்றி மேற்பார்வை செய்து கொண்டு வந்த பொது, ஒரு காடையர் கூட்டம் அவரை வாள்கள், பொல்லுகளால் திட்டமிட்டு தாக்கியது . தாக்குதல் நடத்தியவர்கள் இனம் தெரியாத ஒரு குழுவினர். இந்த குற்றச்செயல்களில் எவரும் உடனடியாக கைது செய்யப்படவில்லை.

பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPC's) அரசாங்க சொத்துக்களை நிர்வகிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்புள்ளவை. அத்தகைய மாநில சொத்துக்களின் பாதுகாவலர்கலான மேலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்றால், அரசு எதிர்பார்க்கும் விதத்தில் அவர்கள் எவ்வாறு தங்கள் கடமைகளை நிறைவேற்றலாம் என்று என்ற கேள்வியை தேயிலை தோட்ட மனேஜர்களின் சங்கம் அரசிடம் கேட்டது.

தோட்டத்துக்கு வெளியில் உள்ள காடையர் கூட்டம் ஒன்றின் மூலம் தோட்டப் பரிபாலனத்தில் குறுக்கீடு, அச்சுறுத்தல். தேயிலை கொய்யும் பெண்களை கற்பளித்தல் மற்றும் குண்டுவீச்சுக்கள் ஆகியவற்றினை சட்ட அமலாக்க போலீஸ் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், நிலைமையைத் தீர்ப்பதற்கு பொலிசாரால் எவ்வித அர்த்தமுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பலரில் குற்றச் சாட்டுகள் கொழும்பில் இருந்த அமெரிக்க உயர் கமிஷனர் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு தோட்டத்தின் பாதுக்காப்புக்கு எட்டு பேர் கொண்ட சிறப்பு போலீஸ்படை (Police Task Force) நியமிக்கப் பட்டது.

சமீப காலமாக பொலீஸின் இயலாமை நிலையைக் கண்டு தோட்டத் தொழிலாளர்கள் மனச்சோர்வடைந்தனர். நாட்டில் போர் நடந்த மோசமான காலக்கட்டத்தில் கூட, தோட்ட மேலாளர்கள் தங்கள் கடமைகளை ஒரு சுமையாக கருதாமல் ஆயிரம் ஏக்கர் தோட்டத்தை ஒழுக்கநெறி மற்றும் நல்ல ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் முன்மாதிரியாக செயல்பட்டனர் சட்ட அமலாக்க அதிகாரிகள்.
தெரினியாகலவில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதும அத்த கொடவின் தொழில் ஓன்று . ஊர்வாசிகளை வற்புருத்தி குடிக்க வைப்பான். மறுப்பவர்களுக்கு அடி கொடுப்பான்,. அவ்வூரில் பத்மாகுமார் ஒரு விவசாயி. பல ஏக்கர் விவசாய காணி வைத்திருந்தான். அந்த காணியை மிகக் குறைந்த விலைக்கு அவனின் அறுபது மில்லியன் ரூபாய் பெறுமதியான 50 ஏக்கர் காணியை தனக்கு பத்து மில்லியன் ரூபாயுக்கு தரும்படி அந்த விவசாயியை அதா கொட வற்புறுத்தினான் அதா கொட. அவன் முடியாது என்று மறுத்த பொது அவனைக் கடத்தி சென்று கொலை செய்தான்
அதா கொடவுக்கு எதிரான் முறைப்பாடுகளுக்கு தெரினியாகல போலீசால் ஒன்றுமே செய்ய முடியவில்லை காரணம் அவனின் நணபர் சப்ரகமுவமாகாணத்தின் முதல்வர் ஹேரத் என்பவர். ஹேரத் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவின் ஆதரவாளன் .

அரசு மாறியதும், தோட்டத்து பெரிய துரையை கொலை செய்த கூட்டத்தில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் 21 பேர் மீது விசாரணையை முடிந்து அவர்கள் மேலே வழக்கு தாக்கல் செய்யும் மட்டும் 3௦ மாதங்கள் விலக்கு மறியலில் அவர்கள் வைக்கப்பட்டனர். விசாரணை முடிவில் மூவர் குற்றவாளிகள் இல்லை என் விடுதலை செய்யப்பட்டனர். பாதால குழுவில் அதா கொட, அவன் சகோதரன் உற்றபட 18 பேர் மீது, பாதுகாப்புப் படையினரின் மேல்தாக்குதல்கள் நடத்தியதுக்கும் மற்றும் கொடூரமாக தீங்கு விளைவித்ததுக்கும், மற்றும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி கொலை செய்ததுக்கும் , அவிசாவளை உயர் நீதிமன்ற நீதிபதி மரணதண்டனை விதித்தார் .அந்த கூட்டத்தில் எட்டு பேர் தோட்ட்தை சேர்ந்த தமிழர்கள். நீதி வென்றது .

தெரினியாகல கிராமம் நிஹால் பெரேராவை பலி எடுத்த பின் அமைதியனது. அந்தக் கிராமத்துக்கு அமைதி கொண்டு வந்த பெருமை நூரி தொட்டத்து காலம் சென்ற சுபீரிண்டேண்டன் நிஹால் பெரேராவைச் சேரும்.
****
(உண்மையும் புனைவும் சேர்ந்தது)

எழுதியவர் : பொன் குலேந்திரன் – கனடா (17-Jul-18, 7:13 pm)
பார்வை : 115

மேலே