காதல் வீதிப் பறவையே
தூதுசென்று வாஅன் னமேகா தலனிடம்
காதினில் சென்றுநீ மெல்லத்தான் சொல்லியே
தேதி குறித்துவா காதலர் சந்திக்க
காதல்வீ திப்பறவை யே !
---ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
தூதுசென்று வாஅன் னமேகா தலனிடம்
காதினில் சென்றுநீ சொல்லிடு-- சூதிலா
காதல்வீ திப்பறவை யேநாங்கள் சந்திக்க
தேதி குறித்துநீ வா !
---ஒரு விகற்ப நேரிசை வெண்பாவாக