இரவு பகல் என்று சுழலும் பூமி

சுழலும் கோள்கள்
நாளுக்கும் கிழகமைக்கும்
சுழல்கின்றதா?
சுழலும் கோள்களில்
தனக்குத்தானே சுழன்று கொள்ளும்
பூமியால் மனிதனுக்கு
பகலின் இயக்கமும்
இரவின் உறக்கமும் கிடைத்தது
இரவு பகல் என்று சுழலும்
நாளின் பக்கங்களை அடையாளப்படுத்த
நட்புக் கோள்களின் பெயர்களையும் தந்தான் மனிதன் !

பகலுக்கும் இரவுக்கும் இடைப்பட்ட மாலையை
காதல் பொழுது என்று எழுதினர் மனிதரில் சிலர்
அன்றிலிருந்து
பகல் இரவு எனத்திரும்பும் நாளின் பக்கங்களில்
வாழ்வு எனும் அர்த்தமுள்ள அத்தியாயங்களை
எழுதத் துவங்கியது பூமி !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jul-18, 8:14 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 144

மேலே