அலை மோதும் நிலவு

======================
துகில் போர்த்தி உறங்கிடும் வானின்
=துயர் நீள வளர்ந்திடும் இரவு
மகிழ் வேதென துடிகிற பொழுது
=மன வேதனைக் கொண்டிடும் அழுது
முகில் சூழவே வழிகிற கருமை
=முகம் காட்டவே மறுக்கிற நிலைமை
அகழ்ந் தோடிட தவித்திடும் தவிப்பால்
=அலை மோதுது அழகிய நிலவு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (29-Jul-18, 2:03 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 253

மேலே