மனிதன்-மோகம்-காமம்-காதல் Reversal in Evolution
பேசவும் தெரியாது
மிருகம்போல் மனிதன்
நடமாடிய காலத்தில்
மொழி தெரியாது
ஆயின் மோகம்
காமம் இரண்டும்
தெரிந்திருந்தான்....
மொழி அறிந்தான்
பண்படைந்தான்
காமத்தோடு காதல்
சேர்த்தான் ....நாகரீகம்
இன்று காதல் போய்
காமமும் மோகமும்தான்
மீண்டும் மிஞ்சுமோ என்று
பயம் ......பாலியல் வெறியாட்டங்கள்
வெளியே பயிரை மேய்ப்பதுபோல்
ஆண்டவன் ஆலயத்து அறங்காவலர்கள்
இந்த விபரீத காம விளையாட்டில் ....
உலகம் முழுவதும் பரவலாக
பணி இடத்தில் பெண்ணிற்கு
பாதுகாப்பில்லை .................மானபங்கம்
மறைந்து பாயும் துச்சாதனர்கள்
இதை என்னென்பது?
பரிணாமவளர்ச்சியில் பின் தங்குதல் என்பதா?
Reversal in evolution.......?