அன்புடன் ஒலிக்க

வெங்கதிரோன் மறைய
வெட்கமுடன் முல்லை விரிய

குவளை மலர் தன் இதழ் திறக்க
கிளிகள் கொஞ்சிக் குலாவ

குயில் காதல் கதை பேச
ஆலய மணி அன்புடன் ஒலிக்க

ஆண்டவனை காண
நான் செல்லும்
மயக்கும் மாலை வந்தது...
என் மனமும் இனிதே குளிர்ந்தது.....

எழுதியவர் : (6-Aug-18, 3:02 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 110

மேலே