கருணாநிதி மறைவு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நேற்று அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:
சமூக நீதிக் காவலராய், ஒடுக் கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் கேடயமாய் திகழ்ந் தவர். சுயமரியாதை திருமணங் களை சட்டப்பூர்வமாக்கி, பெண் களுக்கு சம உரிமை நல்கி சொத்தில் சம பங்கு தந்தவர் கருணாநிதி. தமிழ்நாடும், தமிழினமும், தமிழ் மொழியும் உள்ளவரை அண்ணன் கருணாநிதியின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரி வித்துக்கொள்கிறேன்.
மத்திய இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன்:
அரசியல் நிலையை தனது புத்திகூர்மையானசெயல்பாட்டின் மூலம் எத்திசைக்கும் இழுத்துச் செல்லும் வல்லமை படைத்தவரான திமுக தலைவர் கருணாநிதி மறைந்தார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். அவரது இழப்பால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை வேறு யாராலும் நிரப்ப இயலாது. அவரது பிரிவை தாங்கும் வலிமையை அவரது குடும்பஉறுப்பினர்கள், கட்சி தொண்டர்களுக்கு வழங்க இறைவனை வேண்டுகிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழகத்தில் சமூக நீதியை நிலை நிறுத்தியதிலும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உரிமைகளை வழங்கியதிலும் கருணாநிதியின் பங்கு மகத் தானது. கடந்த ஜூலை 29-ம் தேதி காவிரி மருத்துவமனைக்கு நான் நலம் விசாரிப்பதற்காகச் சென்றபோது, அவரது உடல்நிலை திடமாக இருப்பதாகவும், விரைவில் இல்லம் திரும்புவார் என்றும் ஸ்டாலின் கூறினார். அவர் விரைவில் நலம் பெற்று வருவார் என நம்பிக்கொண்டிருந்த வேளையில்தான் அவரது மறை வுச் செய்தி நம்மையெல்லாம் தாக்கியிருக்கிறது. அவரின் மறைவு திமுகவுக்கு மட்டுமின்றி, தமிழகத்துக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
கருணாநிதி 80 வருட கால அரசியலில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவில் பல பிரதமர்களை உருவாக்க காரணமாக இருந்தவர். 'தமிழர்களின் பாதுகாவலர்' என அவர் போற்றப்பட்டார். அவரது இழப்பு தமிழ் சமுதாய மக்களுக்கு பெரும் இழப்பு; அவரது வழியில் ஸ்டாலின் பயணிப்பார் என்று நம்புகிறோம்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்
கருணாநிதி மறைந் தார் என்ற செய்தி மன தளவில் ஏற்றுக் கொள்ள முடியாத துயரச் செய்தி யாகும். தனது வாழ்க் கையில் சந்தித்த சோதனைகளையும், நெருக்கடிகளையும் எதிர் கொண்டு வெற்றி கண்ட அவர், தனது உடல் நலப் பாதிப்பில் இருந்தும் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். நமது நம்பிக்கை பொய்யாகி விட்டபோதிலும், தமிழக மக்களின் நெஞ்சங் களில் என்றென்றும் கருணாநிதி நீங்காமல் நிலைத்து நிற்பார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
கருணாநிதியின் மறைவு அதிர்ச்சியையும், வேதனையை யும் அளிக்கிறது. தலைசிறந்த பேச்சாளராகவும், எழுத்தாள ராகவும், பத்திரிகையாளராகவும், கலைத்துறை வித்தகராகவும் விளங்கிய அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப் பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள் கிறேன்.
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்
தமிழக அரசியல் வர லாற்றை எழுதினால் அதில் அதிக பக்கங்களை கருணாநி திக்காகத்தான் ஒதுக்க வேண்டும். தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அங்கம் அவர். மாநிலங் களுக்கு பல உரிமைகளை பெற் றுக் கொடுத்தவர், மாநில முதலமைச்சர்களை ஒருங் கிணைத்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தவர் என அவரின் அரசியல் சாகசங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
கருணாநிதியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. தமிழக அரசியல் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் கருணாநிதி ஆற்றிய பங்கு சிறப்பானது.
அரசியல், சமூக நீதி மற்றும் மாநில உரிமைகள் ஆகியவற்றுக்காக சமரசம் செய்து கொள்ளாத போராளி அவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், திமுகவினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்
திராவிட தத்துவ தலைவராக, நிறைவான ஜனநாயகவாதியாக, பண்பட்ட பகுத்தறிவு சூரியனாக இருந்த அவரின் ஒவ்வொரு வார்த்தையும் வெற்றி வாழ்வுக்கான படிகளாக அமைந்திருக்கின்றன. கருணாநிதியின் மறைவுச் செய்தி தமிழக மக்களுக்கு பேரிடியாக அமைந்துவிட்டது.
மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா
சமூகநீதி என்றால் இடஒதுக்கீடு என்ற அளவில் முடிந்துபோய் விடக்கூடியது அல்ல, எல்லா நிலையிலும் எவரும் சமத்துவம் என்ற நிலையை எய்துவதே என்ற புரிதலை கருணாநிதி கொண் டிருந்தார். கருணாநிதியின் மறைவு ஒவ்வொரு தமிழருக் கும் சமூக நீதி போராளி களுக்கும் தனிப்பட்ட இழப்பாகும். அவரை இழந்து வாடும் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத் துக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறேன்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்
இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதி யும் தமிர்களின் நெஞ் சில் நீங்கா இடம் பெற்ற வருமான கருணாநிதி யின் மறைவு உலகத் தமிழர்களுக்கு பேரிழப் பாகும்.
தமாகா மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன்
கருணாநிதி மறைந்தார் என்ற செய்தி என்னை இடியென தாக்கியது. காமராஜர், ராஜாஜி, அண்ணா, எம்ஜிஆர் மூப்பனார், ஜெயலலிதா என்ற வரிசையில் கடைசி அத்தியாயமாக இருந்த கருணாநிதியும் மறைந்து விட்டார். அவரது மறைவு தமிழகத்துக்கும், நாட்டுக்கும் பேரிழப்பாகும்.
அமெரிக்கத் துணைத் தூதர்(பொறுப்பு) லாரன் லவ்லேஸ்
தமிழக மக்களுக்கும் உல கெங்கும் வாழும் தமிழர்களுக்கும் சென்னை அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் சார்பில் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள் கிறேன். அன்னாரின் குடும்பத்தா ருக்கு நமது பிரார்த்தனைகள்.
கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்
கருணாநிதியின் மறைவு உலக தமிழர்களுக்கு பேரிழப்பு ஆகும். அவருடைய வாழ்க்கை பாதை, அரசியல் பாதை அனைவருக்கும் மிகப்பெரிய பாடமாக அமையும். கருணாநிதியின் மறைவை தாங்கக்கூடிய மன வலிமையை அவர் குடும்பத்தாருக்கும், உலக தமிழர்கள் அனைவருக்கும் இறைவன் தர வேண்டும்.
சிஐடியு தமிழ் மாநிலக்குழு தலைவர் அ.சவுந்தராசன்
தமிழகத்தின் பொது போக்கு வரத்து நாட்டுடைமை ஆக்கப் பட்டதில் கருணாநிதியின் பங்கு போற்றத்தக்கது. அவரை இழந்து வாடும் கட்சி தொண்டர்களுக்கும். அவரது குடும்பத்தாருக்கும் தொமுச அமைப்பினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்குநேரி எம்.எல்.ஏ எச்.வசந்தகுமார்
தமிழ் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை தினமும் ஓதியவர், சங்க கால இலக்கியத்தின் சுவையை தமிழ் மக்களுக்கு வழங்கியவர் கருணாநிதி. அரசியலில் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் வென்று காட்டி சரித்திரம் படைத்த கருணாநிதி புகழ் வாழ்க.
பி.ஆர்.பாண்டியன்
விவசாயிகளின் வாழ்வில் ஒளி விளக்காக திகழ்ந்தவர் கருணா நிதி. காவிரி உரிமை மீட்புக்கான இறுதிக்கட்டப் போராட்டம் எங் களுக்கு முழுப் பங்களிப்புடன் துணை நின்றவர்.
காவிரி டெல்டா விவசாயிகள் குடும்பங்களின் தலைவராக விளங்கியவர். அவரது மறைவால் விவசாயிகள், உலக தமிழர்கள் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்து உள்ளனர்.