சுதந்திர இந்தியா

வெறும் வியாபாரம் செய்வதாய்
நாட்டில் கால்வைத்தான் -நாட்டின்
வளத்தில் அவன் நாட்டம் பதிய
துண்டு துண்டாய் இருந்த நாடு
அதில் உலவிவந்த பச்சை தேச துரோகிகள்
ஒற்றுமை இல்லா மன்னர்கள்
இப்படி இவை சாதகமாய் இருக்க
வியாபாரி நாட்டை வியாபார
பண்டமாக்கி, துப்பாக்கி வெடிகொண்டு
குதிரைப்படை திரட்டி நம்
நாட்டவரையே பெருவாரியாக
போர்வீரராய் வைத்த ராணுவம் கொண்டு
நாட்டையே தன பாதத்தில் அடிபணிய வைத்தான்
பறிபோனது நமது சுத்தந்திரம்
அந்நியன் ஆட்சியில் கொத்தடிமை ஆனோம்

முன்னூறு வருடங்கள் நாம் அடிமைகளாய் இருந்தோம்
எத்தனையோ மா வீரர்கள், மன்னர்கள் , தியாகிகள்
போன சுதந்திம் மீட்க பெரும்பாடு பட்டனர்
தங்கள் உயிரையே பணம் வைத்து உயிரையும் தந்து
அப்போது யுகபுருடனாய் வந்தவரித்தார்
காந்தி எனும் மோகன்தாஸ் கரமச்சந்தி காந்தி
கத்தி இன்றி, ரத்தம் இன்றி,வன்முறையற்ற
'அஹிம்சை'முறையில் போரிட்டு வெள்ளையனிடமிருந்து
நாட்டை மீட்டார் சுதந்திர நாடாக ............
'சுதந்திர இந்தியா' ஆனது இற்றைக்கு எழுபத்தொரு
வருடங்களுக்கு முன்பாக............
'ஆடுவோமே, பள்ளுப்பாடுவோமே, ஆனந்த
சுதந்திரம் அடைந்துவிட்டோம்' என்று சுதந்திரம்
அடையும் முன்பே பாடிச்சென்ற மஹாகவி
பாரதியின் பாட்டிற்கிணைய......................


நம்நாடு சுதந்திர நாடு நாம் எல்லாம்
சுதந்திரமாய்த்தான் சுற்றி வளம் வருகிறோம் இன்றும்
முன்னேற்றப்பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறோம்.
இன்னும் முன்னேற வேண்டும்,பெண்கள் இன்னும்
முன்னேற வேண்டும், அவர்கள் மீது ஈனர் செய்யும்
வன்கொடுமைகள் நீங்கவேண்டும்
இல்லார் என்று யாரும் இருத்தல் கூடாது
எல்லாரும் எல்லாம் பெறவேண்டும்
நல்லோர்கள் நாட்டை ஆளவேண்டும்
நாட்டை தன வீட்டாய் மாற்ற நினைக்கும்
அற்பர்கள் கைகளில் ஆட்சி போக கூடாது
முன்னேற்றப் பாதையில் நாம்
நாளை சந்திர மண்டலித்தில் நம் முயற்சியிலேயே
கால்வைத்து குடிவைப்போம்!
குடியாட்சி நிலைக்கவேண்டும் என்றும்
சுதந்திரம் நம் பிறப்புரிமை ...........அது
ஒருபோதும் பறிபோகலாகாது............

போனது அந்த நேற்று, 'பின் தங்கிய நாடு' இது.
முன்னேற்றப் பாதையில் 'முன்னேறும் நாடு' இன்று
நாளை ' ஒரு வல்லரசு நாடாய்' கொடிகட்டி
உலகிற்கு முன்னோடி நாடாய் திகழவேண்டும்
நம் நாடு, சுதந்திர இந்தியா என்றும் எப்போதும்
வாழ்க சுதந்திரம், வளர்க மனித நேயம்
வாழ்வோம் அண்ணல் காந்தி அடிகள் வழியிலே
அஹிம்சையில் உயர்வுகண்டு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Aug-18, 9:49 am)
Tanglish : suthanthira indiaa
பார்வை : 109

மேலே