சுதந்திர தின வாழ்த்துகள்

சுதந்திர தின வாழ்த்துகள்


சுதந்திரம் என்ற வார்த்தைக்கே சுதந்திரமில்லா காலமடா இது...

சுதந்திரமாம் சுதந்திரம் தமிழா உனக்கு கிடைத்ததா அந்த சுதந்திரம்...

வெள்ளையன் ஆட்சியை விட இந்த கொள்ளையன் ஆட்சியில் கிடைத்ததா சுதந்திரம் உனக்கு...

உன் உரிமைக்கு போராடும் சுதந்திரம் உண்டா உனக்கு...

நீ நினைத்ததை படிக்கும் சுதந்திரம் உண்டா உனக்கு...

உன் நிலத்தில் பயிரிடும் சுதந்திரம் உண்டா உனக்கு...

உன் உழைப்பை அனுபவிக்கும் சுதந்திரம் உண்டா உனக்கு...

பெண்ணே தனிமையில் பயணிக்கும் சுதந்திரம் உண்டா உனக்கு...

பணத்திற்கு இருக்கும் சுதந்திரம் மனிதா உன் நேர்மைக்கு உண்டா...

மாட்டுக்கு கிடைத்த சுதந்திரம் மனிதா உன் உயிருக்கு உண்டா...

வசதிக்கு திருடும் சுதந்திரம் மனிதா உன் பசிக்கு உண்டா...

மதுவுக்கு கிடைத்த பாதுகாப்பு மனிதா உன் மகளீருக்கும் குழந்தைக்கும் உண்டா...

பச்சிளம் குழந்தைக்கே கிடைக்காத சுதந்திரமடா...
சுதந்திரமாம் சுதந்திரம்...


- த.சுரேஷ்.

எழுதியவர் : சுரேஷ் (15-Aug-18, 9:38 am)
சேர்த்தது : த-சுரேஷ்
பார்வை : 1721

மேலே