விஞ்ஞானம் வியக்கும் மனிதம்
இயற்கை பிரசவம் இனிதல்ல என்றீர்
ஏற்றோம்
கத்தி கொண்டு சிசுவெடுத்தீர்
அதே கத்தியால்
சிறுநீரகம் வேண்டி சிசுவழித்து
நெகுழிக்குள் வைத்து நிலம்புதைத்தீர்
விஞ்ஞான வளர்ச்சி
கரியும் உப்பும் கலந்தே தேய்த்தோம் பல் அன்று
பற்பசை என்றீர் பணிந்தோம்
நீரே கேட்டீர் இன்று
கரியும் உப்பும் உண்டோ உம் பற்பசையில்
விஞ்ஞான வளர்ச்சி
அண்ணாந்து நீர் குடித்தால் காது கேளாது
குனிந்தே குடித்தோம்
அட சீ இது என்ன பழக்கம் என்றீர்
உறி குழல் கொண்டு உறிவோம்என்றீர்
குனியாமல் குடித்துதான் காட்டுங்களேன்
விஞ்ஞான வளர்ச்சி
அணைகளை குடைந்து அழகழகாய் வீடுகள்
அமைத்தீர்
நீரில்லையென்று நிலம் பெயர்ந்தீர்
பின் குடிநீர் குப்பிகள் தந்தீர்
விஞ்ஞான வளர்ச்சி
இன்று நீர் வந்து வீடடித்து போகையில்
ஐயகோ நீர்த்தாய் நிறுத்த
அணை இல்லை ஆர்ப்பாட்டம் செய்தீர்
விஞ்ஞான வளர்ச்சி
ஊரெல்லாம் நீராக இருந்தாலும்
குப்பிநீர் விலை மட்டும் குறைக்க மறந்தீர்
இறுதியில் சுவாசக்காற்றை குப்பியில் அடைத்து
தெருவில் விற்றீரே
இதுவல்லவோ விஞ்ஞான வளர்ச்சி
உண்மையில் வியக்கிறது மானிடம்