கொடுமழைக்கு கொடு கரம்
மலையாள தேசம்
மழையாலே சேதம் - மக்கள்
பிழையாலே நாசம்
கொலை செய்தது இயற்கை என இகழ்தல் தகுமோ?
பேய்மழை பெய்ததுவே இங்கு
பேரிடர் மூண்டதுவே
பேரணை நீரெல்லாம் பொங்கி
தெருக்களில் சூழ்ந்ததுவே
நிலம் அது சரிந்ததுவே
அகம் எல்லாம் புரண்டதுவே - மக்கள்
முகம் எல்லாம் கண்ணீர் மூடி
சுகம் எல்லாம் இருண்டதுவே
துளி மூச்சு விடாமல் அடக்கி வைத்திருந்த அணையெல்லாம்
அப்பாடா என பெருமூச்சு விட்டதனால் வந்த வினை
அங்குள்ள அன்பர்கள் அனைவருக்கும் ஆபத்து
ஆதரவாய் ஓடிவந்து கை நீட்டு
தமிழ் தாய் தவபுதல்வி வசிக்கின்ற வளநாடு
இறைவன் அவன் சொந்த திருநாடு
இன்று இயற்கை கட்டியதுவே இடர் கூடு
இதை மீட்க கைகோர்த்து நீ படு பெரும்பாடு
சமூகத்தில் பணம் பெருத்த பெரும்கை எல்லாம் - இன்று
சகதி நிலத்தில் சாகின்றனர்
சகல வளம் படைத்தவர் எல்லாம்
சாலை லாரி பாத்தவுடன் கை ஏந்தி நிற்கின்றாய்
சூழல் விசிறி ஹெலிகாப்டர் வானிலே வந்தவுடன்
வணங்கி நின்று காக்க சொல்றார்
மீட்டேடுக்க வாரீர் இந்நன் நிலத்தை
மீட்போர் நாம் தான் பாரத மக்கள் யாவரும்
பல கை கோர்ப்போம் வாழ்வு தர
இங்கு சாதி இல்லை மதம் இல்லை
அரசியல் செய்ய வேண்டாம்
நிலம் சூழ்ந்த நீரை எல்லாம்
நீக்கிடுவோம் மனிதம் கொண்டு
வெல்லட்டும் மனிதம் இன்று
வாழ்க கேரளம் வாழ்க பாரதம்
வாழிய வாழிய வாழியவே
தமிழ் தாய் புதல்வன்
மலையாள மாதா சகோதரன்
மதியரசு.