பிச்சைகாரியின் கவலை

பேருந்து நிலையங்களே!
என்
வாழ்வுந்து நிலையம்
கையேந்தி பிச்சையெடுக்கும்
பணத்திலே...
சையேந்தி பவனில்
வயிறை நனைத்துவிட்டு
செல்லுகையில்...
பத்து வீடு
பாத்திரம்
விளக்கி
பிழைக்கலாமே !
என்று
அதட்டல் குரல்
என்னை நோக்கி..
இப்படி
ஆயிரக்கணக்கான
ஏவுகணைகள்
ஏராளம்

பத்து வீடு
வேண்டாம்மா?
உன் ஒரு வீட்டில்
வேலை கொடுயென்றால்

பேசாமடந்தையானால்
அவள்..

ஊருக்கு உபதேசம்
சொல்லாமல்

பேருக்கு ஒருத்தர்
வேலை கொடுத்திருந்தால்

பிச்சைகாரி வேலையை
விலக்கியிருப்பேன்

- ச.சேட்டு மதார்சா

எழுதியவர் : ச.சேட்டு மதார்சா (30-Aug-18, 3:26 pm)
சேர்த்தது : settu matharsha
பார்வை : 194

மேலே