நல்ல ஆசிரியன்
ஆத்மபூர்வமான ஈடுபாடோடு பயில்விக்கும் ஆசிரியர்
ஒருவரே அவர் தன வாழ்நாளில் பல்லாயிரம்
உயர்ரக மாணவ சிகாமணிகளை உருவாக்கலாம்
இதன் அடிப்படையில்தான் பல்கலை கழகங்கள்
இயங்குகின்றன என்பது அறிஞராகள் கருத்து
எத்தகைய உயர்ந்த அந்தஸ்து அளிக்கிறது இஃது
நல்லாசிரிய பெருமக்களுக்கு இதை உணர்ந்து
ஆசிரியர்களும் வேற்றுமைகள் ஏதுமின்றி
சுயநலவேட்கைகள் துறந்து தன்னிடம் பயிலும்
மாணவன் ஒவ்வொருவனையும் ஒரு மாணிக்கமாய்
எண்ணி கல்விபுகட்ட ஒவ்வோர் குடும்பமும்
பல்கலைக்கழகமாகலாமே .......அப்பப்பா ஆசிரியரே
இப்படித்தான் நீவீர் இருத்தல் வேண்டும் என்பது
என் விருப்பம் .............நானும் ஒரு காலகட்டத்தில்
பல்கலைக்கழக ஆசிரியனே இதை அனுட்டித்தவன்
என்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்