மூக்கேசு கச்சுமூக்கா

ஏன்டி அமெரிக்காப் பொண்ணு, அஞ்சு வருசங் கழிச்சுத்தான் நம்மூரு நெனப்பு வந்துச்சா? கலியாணம் பண்ணீட்டுப் போனவ ரண்டு கொழந்தைங்களப் பெத்ததுக்கப்பறம் தான் வந்திருக்கிற.

என்னங்க பாட்டிம்மா செய்யறது? அஞ்சு வருசமா வரமுடியாத சூழ்நிலை.

சரி. சரி. பசங்களுக்கு என்ன பேருங்கள வச்சிருக்கிற?

மூத்த பையன் முகேஷ்.

என்னது மூக்கேசா?

மூக்கேசு இல்லங்க பாட்டிம்மா. முகேஷ்.

முக்கேசா. சரி. சின்னப்பையன் பேரு என்ன?

ஹஸ்முக்.

என்னது கச்சுமூக்கா? என்னடி இது மூக்கு, முக்கறது, மொணகறதுன்னெல்லாம் பேரு வைக்கிறதா? என்ன அநியாயம்டி இது?

இப்ப இந்திப் பேருங்கள வைக்கிறதுதான் நாகரிகம். உங்களால இந்திப் பேருங்கள சரியா உச்சரிக்க முடியாதுங்க பாட்டிம்மா.

சரிடீயம்மா. தாய் மொழியை யாரும் மதிக்கிறதில்ல.
■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●●●●●●●●●●●●●
முகேஷ்(full of cheer)
ஹஸ்முக்(Lord of the dumb)

எழுதியவர் : மலர் (8-Sep-18, 10:50 pm)
பார்வை : 103

மேலே