கொடு மையை

வாய் பூட்டிற்கு வசதி வாய்க்க
வதந்தி வருத்தப்பட்டு
நிகழ்கால விருந்தொப்பலுக்கு
முன்னோர் சடலத்தை பகடை காயாக்கி
பொய்க்கால் குதிரை மேல் ஏற்றிவிட்டு...
மேடைக்கு மேடைக்கு
புளித்துப்போன கட்டுக்கதை புலம்புதனை
புறந்தள்ளி புதைகுளிக்கு..
அங்கீகாரம் வழங்கியதால்..
சாவடி சந்ததி
மீட்காமல் போனது முன் பணத்தை ..
நடந்தது என்னவோ என்று வினவ .....
உண்மை உரைத்தது சவப்பெட்டி ...
ஓட்டை வாங்கிகொண்டு
மக்களை ஓட்டாண்டி ஆக்கினாய் அல்லவா !
ஆறடிக்கே புலம்புகிறாய் ............
அறுபது ஆண்டு உன் ஆக்கிரமிப்பு ....
எது கொடுமை !
கொடு மையை .....
உன் கெடுபிடிக்கு முற்றுப் புள்ளி வைக்க .....
இனியேது .....
மக்கள் தோற்பது ஓட்டுச் சாவடியில் !
ஒற்றுமை ஓங்கி நிற்க !

எழுதியவர் : (12-Sep-18, 12:10 am)
பார்வை : 98

மேலே